10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் எப்போது? செங்கோட்டையன் டிவிட்…

சென்னை:
த்தாம் வகுப்பு தேர்வுகள் கண்டிப்பாக நடைபெறும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்  செங்கோட்டையன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் ஜூன் மாத இறுதிக்குப் பிறகு  தேர்வு அட்டவணை தெரிவிக்கப்படும் என்று தெரிவித்து உள்ளார்.
ஜூன் மாத இறுதிக்குப் பிறகு அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அதாவது ஜூலை மாதம் அறிவிக்கப்படும் என்பதை, அவர்  ஜூன் மாத இறுதிக்குப் பிறகு என்று  டிவிட் பதிவிட்டுள்ளதாக தெரிகிறது.

தமிழகத்தில்  ஏப்ரலில் நடைபெற இருந்த 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள், கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கு காரணமாக  தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ​இந்த தேர்வுகளை இந்த மாதம் (மே மாதம்) இறுதியில் நடத்தப்படும் என முன்னதாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஊரடங்கு  மே 17வரை நீட்டிக்கப்பட்டு உள்ளதால், மீண்டும் தேர்வு தேதியை பள்ளிக்கல்வித்துறை தள்ளி வைத்தது.

இந்த நிலையில், அமைச்சர் செங்கோட்டையன், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து இன்று மாலை டிவிட் பதிவிட்டுள்ளார். அதில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் உறுதியாக நடைபெறும்.

உயர்மட்டக்குழு கூட்டத்திற்கு பின் ஜூன் மாத இறுதிக்குப்பிறகு பொதுத்தேர்வு கால அட்டவணையை அறிவிக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் பதிவிட்டு உள்ளார்.

அவரது டிவிட்டின் காரணமாக ஜூலை மாதத்தில்தான் தேர்வு அட்டவணை வெளியாகி வாய்ப்பு உள்ளது தெரிகிறது.