ஜூன் 3வது வாரத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு…

சென்னை:

கொரோனா பாதிப்பு காரணமாக தள்ளி வைக்கப்பட்ட 10வது வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 3வது வாரத்தில் நடைபெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் 10ம்வகுப்பு பொதுத்தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது.. மேலும் 1முதல் 9ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், கொரோனா வைரஸ் தொற்று தீவிரம் அடைந்து வரும் நிலையில் ஒத்திவைக்கப்பட்டுள்ள , 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 14ந்தேதிக்கு பிறகு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் கொரோனா தாக்கம் குறையாத நிலையில், ஊரடங்கு மே 17ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால்,  10ம் வகுப்பு தேர்வு மேலும் ஒத்தி வைக்கப்பட்டது.

இதையடுத்து,  வரும் ஜூன் மாதம் 3 ஆவது மாதத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்த தேர்வு துறை முடிவு செய்துள்ளது. தொடர்ந்து அனைத்து  தேர்வுகளையும் நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டு இருப்பதாகவும், அதற்கான தேர்வு அட்டவனை விரைவில் வெளியாகும் என தெரிகிறது.