10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ், ஆங்கிலத் தேர்வுகளின் நேரம் மாற்றம்! கல்வித்துறை புதிய அறிவிப்பு

சென்னை:

2019ம் ஆண்டு மார்ச் மாதம் நடை பெற உள்ள 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், தமிழ் மற்றும் ஆங்கில மொழித் தேர்வுகளின் தேர்வு நேரம் மாற்றப்பட்டுள்ளது. இதை பள்ளி கல்வித்துறை அறிவித்து உள்ளது.

இந்த தேர்வுகள் காலை நேரத்தில் நடை பெறுவதற்கு பதிலாக பிற்பகலில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகம் முழுவதும் 10 ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 14 ம் தேதி  தொடங்குகிறது. பொதுவாக பொதுத் தேர்வுகள் முற்பகலில் மட்டுமே நடைபெறுவது வழக்கம். காலை 10 மணி முதல் தேர்வுகள் தொடங்கி நடைபெறும். இந்த நடைமுறையில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தமிழ் முதல்தாள், இரண்டம்தாள் மற்றும், ஆங்கிலம் முதல்தாள் மற்றும்  இரண்டாம் தாள்  ஆகிய 4 தேர்வுகளும், மதியம் 2 மணி முதல் மாலை 4.45 வரை நடைபெறும் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

மற்ற பாடங்களான கணிதம், அறிவியல், சமூக அறிவியல் விருப்ப பாடம் ஆகியவை வழக்கம் போல, காலை 10 மணிக்கு தொடங்கி  பகல் 12.45க்கு முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

10ம் வகுப்பு பொதுத்தேர்வின்  தமிழ் முதல் தாள் மார்ச் 14ம் தேதி பிற்பகலிலும், தமிழ் இரண்டாம் தாள் 18ம் தேதி பிற்பகலிலும், ஆங்கிலம் முதல் தாள் 20ம் தேதி பிற்பகலிலும், ஆங்கிலம் இரண்டாம் தாள் 22ம் தேதி பிற்பகலில் நடைபெறும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

பிறபாடங்களான, கணிதம், அறிவியல், சமூக அறிவியல் உள்ளிட்ட தேர்வுகள் முறையே 23,25,27,29 ஆகிய நாட்களில் முற்பகலில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.