தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்கம்…

சென்னை:

மிழகம் மற்றும் புதுச்சேரியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்குகிறது. ஏற்கனவே பிளஸ்-1, பிளஸ்-2 தேர்வுகள் நடைபெற்று முடிந்த நிலையில், இன்று முதல் 10வது வகுப்பு பொதுத்தேர்வு தொடங்குகிறது.

இன்று (14-3-2019) முதல் 29ந்தேதி வரை தேர்வுகள் நடைபெற உள்ளன.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 9,97,794 மாணவ மாணவிகள் இந்த தேர்வை எழுதுகின்றனர். இந்த பொதுத்தேர்வுக்காக மொத்தம் 3731 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தேர்வு நேரம் பிற்பகலுக்கு மாற்றி வைக்கப்பட்டு உள்ளது.  பிற்பகல் 2 மணி முதல் மாலை 4.45 மணி வரை தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் மட்டு  213 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில்  50,678 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர்.

அதுபோல ஏராளமான கைதிகளும் தேர்வு எழுத உள்ளனர். அவர்களின் வசதிக்காக, புழல், திருச்சி, பாளையங்கோட்டை மற்றும் கோவை சிறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. சுமார்   152 கைதிகள்  தேர்வு எழுதுகின்றனர்.

தேர்வுக்காக 49,000 ஆசிரியர்கள் அறை கண்காணிப்பாளர் பணியில் அமர்த்தப்படுகின்றனர். முறைகேடுகளை தடுக்க அனைத்து மாவட்டங்களிலும் சுமார் 5500 பறக்கும் படை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேர்வு மைய வளாகத்தில் மாணவ-மாணவிகளும், தேர்வு அறையில் ஆசிரியர்களும் செல்போனை வைத்திருக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

You may have missed