சக மாணவர்களுடன் விளையாட வீடியோ கேம் கேட்டவருக்கு நடிகர் அளித்த பதில்..

கொரோனா ஊரடங்கில் பிழைப்புக்காக வெளியூர் களுக்கு சென்றவர்கள் ஊர் திரும்ப முடியாமல் தவித்தனர். அவர்களில் ஆயிரக்கணக்கான பேர் களை சொந்த் செலவில் பஸ் மற்றும் விமானத்தில் ஊர்களுக்கு அனுப்பி வைத்தார் வில்லன் நடிகர் சோனு சூட். மேலும் ஆந்திராவில் ஒரு விவசாயி மாடுவாங்க பணம் இல்லாமல் மகள்களை ஏரில் பூட்டி உழுத்தார். அதைக்கண்டு ஷாக் ஆன சோனு உடனடியாக அந்த விவசாயிக்கு டிராக்டர் வாங்கிக் கொடுத்தார்.


இன்னும் பலருக்கு தனது உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறார். இதன் மூலம் அவரை ரசிகர்கள் நிஜ வாழ்வின் ஹீரோ என்று புகழ்கின்றனர்.
இந்நிலையில், மாணவன் ஒருவன், ‘ லாக்டவுனில் நண்பர்களுடன் விளையாட எனக்கு தயவு செய்து PS4 வீடியோ பிளேயர் வாங்கி தர வேண்டும்’ என்று கேட்டிருந்தார்.
அதைப் பார்த்த சோனு சூட். ’உன்னிடம் PS 4 இல்லையென்றால் நீ ஆசிர்வதிக்கப்பட்டவன். இந்த நேரத்தில் புத்தகங்கள் வாங்கி படியுங்கள் அதை நான் உனக்குசெய்வேன்’ என்றார்.