11ம் வகுப்பு விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு ஆகஸ்டு 5ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்…

சென்னை:

மிழகத்தில் பிளஸ்1 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், 11ம் வகுப்பு விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு ஆகஸ்டு 5ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தேர்வுத்துறை அறிவித்து உள்ளது.

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் பிளஸ்1, பிளஸ்2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றது. பிளஸ்2 தேர்வு முடிவுகள  கடந்த ஜூலை மாதம்  16-ஆம் தேதி  வெளியானது.  பிளஸ்1 பொதுத்தேர்வு முடிவுகள் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மறுவாய்ப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை 31ந்தேதி  வெளியானது.

இந்த நிலையில்,  விடைத்தாள் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பவர்கள்  ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும்,  பன்னிரண்டாம் வகுப்பு மறுவாய்ப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் விடைத்தாள் நகல், மறு கூட்டலுக்கு ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.