11/07/2020: சென்னையில் கொரோனா பாதிப்பு  மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை:

மிழகத்தில் கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை  1,30,261 ஆக அதிகரித்துள்ளது. சென்னை யில் இன்று மட்டும் 1,205 பேருக்கு  கொரோனா உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 74,969ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு  படிப்படியாக குறைந்து வருகிறது.  இதுவரை 55,156 பேர் கொரோனா பிடியில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இதுவரை , 18,616 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  சென்னையில் நேற்று  ஒரே நாளில் 27 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1196-ஆக உயர்ந்துள்ளது

சென்னையில் கொரோனா  பாதிக்கப்பட்டவர்களில் ஆண்கள் 57.59 சதவீதம், பெண்கள் 42.41 சதவீதம். நேற்று மட்டும் சென்னையில் 9,189 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையில், மண்டல வாரியாக  கொரோனா பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனை களில், சிகிச்சை பெற்று வருபவர்களின் பட்டியலை  சென்னை மாநகராட்சி  வெளியிட்டுள்ளது.

அந்த பட்டியலில், திருவொற்றியூர் மண்டலத்தில் 802 பேர், மணலியில் 377 பேர்,  மாதவரத்தில் 615 பேர், தண்டையார்பேட்டை மண்டலத்தில் 1,464 பேர்,  ராயபுரத்தில் 1,476 பேர், திருவிக நகரில் 1,273 பேர், அம்பத்தூர் மண்டலத்தில் 1,125 பேர், அண்ணா நகர் மண்டலத்தில் 2,075 பேர், தேனாம் பேட்டையில் 1,868 பேர், கோடம்பாக்கத்தில் 2,383 பேர், வளசரவாக்கத்தில் 990 பேர், ஆலந்தூர் மண்டலத்தில் 551 பேர், அடையாறு மண்டலத்தில் 1,191 பேர்,  பெருங்குடியில் 508 பேர், சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 457 பேரும் கொரோனா பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

.

கார்ட்டூன் கேலரி