11/08/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும்,  5,834 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை  3,08,649 ஆக அதிகரித்துள்ளது.  சென்னையில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வருகிறது.

மாநில தலைநகர் சென்னையில், இன்று ஒரே நாளில் 986 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி யுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,11,054-ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று மட்டுமே 1108 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை 97,574 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ள நிலையில், 11,130 பேர் மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று ஒரே நாளில் சென்னையில் மட்டும் 23 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதுவரை 2,350 பேர் சென்னையில் மட்டும் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,159ஆக உயர்ந்து உள்ளது.  இதில் 47 பேர் தனியார் மருத்துவமனையிலும், 71 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர்.

மாவட்டம் வாரியாக விவரம்:

கார்ட்டூன் கேலரி