11/08/2020  சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா  பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,02,815  ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் மட்டும் 976  பேருக்கு உறுதியானதையடுத்து, பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,10,121 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 1305 பேர் குணமடைந்ததால், இதுவரை நோய் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 96,466 ஆக அதிகரித்துள்ளது.

தற்போதைய நிலையில், 11,328 பேர் தொற்று பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று ஒரேநாளில் 25 பேர் பலியான நிலையில், இதுவரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 2,327  ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 12,387 பேருக்கு கொரோனா சோதனைமேற்கொள்ளப்பட்டுஉள்ளது.

கொரோனா பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 59.04 சதவிகிதம் ஆண்களும், 40.96 சதவிகிதம்  பெண்களும், 1சதவிகிதம் மூன்றாம் பாலினத்தவர்.