டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 45 லட்சத்தை கடந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா  உயிரிழப்பும் 76ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உச்சம் பெற்று வருகிறது.   கடந்த ஒரு மாதமாக தொற்று பாதிப்பு தீவிரமாகி வருகிறது. கடந்த 4 மாத பாதிப்புகளை விட இந்த மாத பாதிப்பு இரு மடங்காக உயர்ந்துள்ளது. தினசரி பாதிப்பு ஒரு லட்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் உச்சபட்சமாக 96,5760 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனார், மொத்த பாதிப்பு  45,59,725 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில்,  70,899 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.இதுவரை, நாடு முழுவதும் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 35,39,983 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றுமட்டும் 1213 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை  76,304  ஆக உயர்ந்துள்ளது.

தற்போதைய நிலையில் 9,42,796  பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.