தமிழக் தேர்தல் ஆணைய செயலர் உள்ளிட்ட 11 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

சென்னை

மிழகத்தில் 11 (ஐஏஎஸ்) அரசு அதிகாரிகள் இன்று திடீர் இடமாற்றம் செய்ப்பட்டுளனர்.

தமிழக அரசு இன்று (ஐ ஏ எஸ்( அரசு அதிகாரிகள் இடமாற்றம் குறித்து ஒரு அரசாணை வெளியிட்டுள்ளது.   தலைமை செயலர் கே சண்முகம் வெளியிட்டுள்ள அந்த அரசாணையின்படி 11 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்    இது குறித்த விவரத்தை இங்குக் காண்போம்,

தமிழக கலை மற்றும் கலாச்சார ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன் பள்ளிக்கல்வி ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக நில சீர்திருத்த இயக்குநர் வி.கலையரசி கலை மற்றும் கலாச்சார இயக்குநராக நியமிக்கப்பட்டு உள்ளார். விடுமுறையில் இருந்து திரும்பி உள்ள மதுரை மாவட்ட முன்னாள் ஆட்சியர் டி.எஸ். ராஜசேகர், மருத்துவப் பணிகள் தேர்வு வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக உள்ள எல். சுப்பிரமணியன் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்   அதைப்போல் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளர் மற்றும் பேரூராட்சிகள் இயக்குநராக இருந்த எஸ். பழனிசாமி பேரூராட்சிகள் இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.

தற்போது சென்னை மாநகராட்சி துணை ஆணையராகப் பணி புரியும் எம். கோவிந்தராவ தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ஏ. அண்ணாதுரை விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக மாற்றப்பட்டு இருக்கிறார். இதே போன்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளும் திடீர் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: 11 IAS officers, 11 அரசு அதிகாரிகள், order, TN Govt, transfer, அரசாணை, இடமாற்றம், தமிழக அரசு
-=-