கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளக்கிரியை சேர்ந்த 11 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 -ஆக அதிகரித்துள்ளது. சூளகிரியைச் சேர்ந்த மேலும் 11 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே அதே பகுதியில் 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலமாகவும், 24 மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலமாகவும், ஒரு மாவட்டம் பச்சை மண்டலமாகவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இவற்றில் கிருஷ்ணகிரி கொரோனா தொற்று இல்லாத நிலையில் பச்சை மண்டலம் என அரசால் அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் அதிக அளவாக சென்னையில் 1,082 பேரும், தொடர்ந்து கோவையில் 141 பேரும் மற்றும் செங்கல்பட்டில் 86 பேரும் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

இந்த நிலையில், கிருஷ்ணகிரியில் 67 வயது முதியவர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஆந்திராவில் பணியாற்றி விட்டு திரும்பி வந்த அவருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதனை மாவட்ட நிர்வாகம் உறுதிப்படுத்தி உள்ளது. இதனால் பச்சை மண்டலம் என அறிவிக்கப்பட்டு இருந்த கிருஷ்ணகிரியில் முதல் கொரோனா பாதிப்பு பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து பச்சை மண்டலமாக இருந்த கிருஷ்ணகிரி மாவட்டம் ஆரஞ்சு மண்டலத்திற்கு மாறியது.