ஆப்கன்: தற்கொலைப் படை தாக்குதலில் 11 பேர் பலி

காபூல்:

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்தில் இன்று தற்கொலைப் படை தாக்குதல் நடந்தது. இதில் 11 பேர் கொல்லப்பட்டனர். 14 பேர் காயம் அடைந்தனர்.

ஆப்கானிஸ்தான் துணை அதிபராக இருக்கும் அப்துல் ரஷீத் டோஸ்டம் நாடு திரும்பிய நிலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. ராணுவ ஜெனரலாக இருந்த இவர் மீது போர்க்குற்ற விசாரணை நடந்து வருகிறது.

சிகிச்சைக்காக துருக்கியில் தங்கி இருந்ததாக தெரிவிக்கப்பட்ட இவர் ஓராண்டுக்கு பிறகு ஆப்கானிஸ்தானுக்கு திரும்பிய நிலையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் இது வரை பொறுப்பேற்கவில்லை.