நீர் வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு: மத்தியபிரதேசத்தில் 11 சுற்றுலா பயணிகள் பலி

குவாலியர்:

த்தியப்பிரதேசத்தில் சுற்றுலா தள நீர்வீழ்ச்சியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கு காரணமாக, ஆற்றியில் நீராடிக்கொண்டிருந்த சுற்றுப் பயணிகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். இதில் 11 பேர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 45 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

மத்தியப்பிரதேச மாநிலம், குவாலியர் அருகே ஷிவ்புரி என்ற இடத்தில் சுல்தான் கார் என்ற  நீர்வீழ்ச்சி உள்ளது. நேற்று விடுமுறை தினமானதால், சுற்றுலத்தல மான இந்த நீர் வீழ்ச்சி மற்றும் அருகே உள்ள ஆற்றில் நீராடி பொழுதை கழிக்க ஏராளாமானோர் குவிந்தனர்.

நீர் வீழ்ச்சியில் குறைந்த அளவே தண்ணீர் விழுந்து வந்ததால், பல சுற்றுலா பயணிகள் அருகில் உள்ள ஆற்றிற்கு சென்று நீராடி வந்தனர். அப்போது திடீரென அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டதால் ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டது.

இதில் சுமார் 50க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் சிக்கினர். செய்வதறியாது திகைத்த அவர்கள் உடடினயாக ஆற்றின் நடுவே உள்ள பாறைகள்மீது ஏறி தஞ்சம் அடைந்தனர்.

இந்த திடீர் வெள்ளம் காரணமாக 11 பேர் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டடு பலி யாகி இருப்பதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும், 40-க்கும் மேற்பட்டோர் வெள்ளம் சூழ்ந்த பாறைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். அவர்களை ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் பணி நேற்று நடைபெற்றது.  இரவு நேரம் ஆகிவிட்டதால், பாறைகளில் சிக்கித்தவித்த 7 பேர் மட்டுமே நேற்று மீட்கப்பட் டனர். மற்றவர்கள் பாதுகாப்பான பகுதியில் நின்றுகொண்டிருந்தனர்.

இந்த நிலையில், மீதமுள்ளவர்களை  மீட்கும் பணி இன்று காலை முதல் நடை பெற்றது. தற்போது ஆற்றில் சிக்கிய 45 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய   மத்தியப்பிரதேச முதல்மந்திரி சிவராஜ் சிங் சவுகான் கூறுகையில், மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது, மீத முள்ள அனைவரும் பத்திரமாக மீட்கப்படுவார்கள்  என்று தெரிவித்தார்.

கார்ட்டூன் கேலரி