டெல்லி: குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்களில் 11 முதலமைச்சர்கள் அந்தந்த மாநிலங்களில் குடிமக்களின் தேசிய பதிவேட்டை அமல்படுத்த எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்.

நாடு முழுவதும் இந்த சட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள் விரிவடைந்திருக்கின்றன. எதிர்ப்பு தெரிவித்த இந்த 11 மாநிலங்கள் இந்தியாவின் நிலப்பரப்பில் 54 சதவீதமும், மொத்த மக்கள் தொகையில் 56 சதவீதமும் ஆகும்.

அந்த பட்டியலில் ஆந்திராவின் ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் மகாராஷ்டிராவின் உத்தவ் தாக்கரே ஆகியோரும் இடம்பிடித்து உள்ளனர்.  இவர்களில் ஜெகன்மோகன் ரெட்டி நாடாளுமன்றத்தில் CAA ஐ நிறைவேற்ற ஆதரவு தெரிவித்தவர்.

முஸ்லீம் தலைவர்களின் தூதுக்குழுவில் உரையாற்றிய தாக்கரே, தனது அரசாங்கம் CAA அல்லது NRC ஐ செயல்படுத்தப்போவதில்லை, மகாராஷ்டிராவில் தடுப்புக்காவல் நிலையங்கள் எதுவும் கட்டப்பட மாட்டாது என்று உறுதி அளித்து இருக்கிறனார். பாஜகவின் முன்னாள் கூட்டாளியான தாக்கரேயின் சிவசேனா, லோக்சபாவில் ஆதரவாக வாக்களித்து,  மாநிலங்களவையில் வாக்களிப்பதைத் தவிர்த்தது.

பாஜக அல்லாத பல மாநிலங்களும், தேசிய ஜனநாயக கூட்டணியினரும் இந்த சட்டத்தை எதிர்த்துள்ளனர். பீகார், ஒடிசா, பஞ்சாப், சத்திஸ்கர், கேரளா,  மேற்கு வங்கம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், டெல்லி ஆகிய மாநிலங்களும் இந்த சட்டத்தை எதிர்த்து வருகின்றன.