சென்னை: தமிழ்நாடு காவல்துறையில் 11ஆயிரம் காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவித்துள்ள, சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) ஆன்லைனில் 26.09.2020 முதல் 26.10.2020 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என  அறிவித்து உள்ளது.

தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வாணையம் தற்போது இரண்டாம் நிலை காவலர், சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பணியிடங்களுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

ஏற்கனவே கொரோனா தொற்று பரவல் காரணமாக, இரண்டாம் நிலை காவலர்கள் தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, அது மாற்றப்பட்டு, தற்போது நேரடி தேர்வுகள் எழுதுவதற்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

இதையடுத்து காலியாக உள்ள பணியிடங்களுக்கான விண்ணப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது,

தமிழக காவல்துறையில், இரண்டாம்நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் போன்ற பதவிகளுக்கு 10,906 காலியிடங்கள் உள்ளன.

இரண்டாம் நிலை காவலர்களுக்கு 10,329 காலியிடங்களும்,

இரண்டாம் நிலை சிறை காவலர்களுக்கு 119 இடமும்,

தீயணைப்பாளர்களுக்கு 458 காலிப்பணியிடங்களும் உள்ளன.

விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தியானவர்களாகவும், 24 வயதிற்குட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பத்தாம் வகுப்பில் தமிழை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும்.

இந்த இரண்டாம் நிலை தமிழ் தேர்வில் சேர்ந்த 2 வருடத்திற்குள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இந்த பணியிடங்களுக்கான தேர்வு கட்டணம் ரூ. 130 வசூலிக்கப்படும்.

சிறை காவலர், இரண்டாம் நிலை காவலர் மற்றும் தீயணைப்பாளர்களுக்கு ரூ.18,200 முதல் 52,900 வரை ஊதியம் வழங்கப்படுகிறது.

மேலும், காலிப்பணியிடங்களுக்காக ஆண்கள் மற்றும் பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேற்கூறப்பட்ட தகுதியுடையவர்கள் www.tnusrbonline.org என்ற இணையதளத்தில்  26.09.2020 முதல் 26.10.2020 வரை விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.