வேலூர்: வேலூர் பகுதியில் பிரபலமான  அம்மா பிரியாணி கடை உரிமையாளரின் வீட்டில் திருட்டு நடைபெற்றுள்ளது.  அவரது வீட்டில் இருந்து  110 பவுன் நகை, ரூ.2 லட்சம் திருட்டு போயிருப்பதாக புகார் கூறப்பட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வேலூரில் பிரபலமானது அம்மா பிரியாணி கடை.  இதன் உரிமையாளராக வேலூர்  கணேசபுரத்தைச் சேர்ந்த மோகன் (வயது 60) என்பர் இருந்து வருகீறார்.  இவரது வீடு பழைய பேருந்து நிலையம் அருகே உள்ளது.  தற்போது உடல்நலக்குறைவு காரணமாக கணேசன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதன் காரணமாக, அவரது குடும்பத்தினர் அவரை சந்திக்கும் வகையில் சென்னை வந்து செல்வது வழக்கம்.

அதுபோல,  நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மோகன் குடும்பத்தினர் அவரை  பார்க்க  வீட்டை பூட்டிவிட்டு  சென்னைக்கு சென்றிருந்தனர். இதையறிந்த  கொள்ளையர்கள்  அவரது, வீட்டின் பின்பக்க கதவை நள்ளிரவில் உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த நகைகள், பணத்தை திருடிச் சென்றுள்ளனர். மேலும், அங்குள்ள காமிரா சேதப்படுத்தியும், சில காமிராக்களை திசை திரும்பியும் வைத்துள்ளனர்.

சென்னையில் இருந்தபடி மோகன் குடும்பத்தினர் மொபைல்  மூலம் வீட்டிலுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கவனித்தபோது கேமரா திசைதிருப்பப்பட்டிப்பது தெரியவந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனேஅருகில் உள்ள உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உறவினர்கள் விரைந்து சென்று வீட்டை திறந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து வீட்டினுள் சென்று பார்த்தபோது, வீட்டில் இருந்து பீரோக்கள் உடைக்கப்பட்டு இருந்ததும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, மோகன் குடும்பத்தினரும் உடடினயாக வேலூர் திரும்பின்ர். இதற்குள் காவல்துறையினரும், சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர். வேலூர் சரக காவல் துணைத்தலைவர் (டிஐஜி) என்.காமினி, காவல்துறை உதவி கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உள்ளிட்டோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்தும், கைரேகை நிபுணர்கள் மூலமாகவும் தடயங்களை சேகரிக்கப்பட்டன. மேலும் சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது._்சஇச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்ததுடன், தனிப்படைகள் அமைத்து திருடர்களை தேடி வருகின்றனர்.

இந்த கொள்ளையில்,  பீரோவில் இருந்த 110 பவுன் நகைகள், ரூ.2 லட்சம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.