Random image

பிறந்த நாள்: அண்ணா சமாதியில் திமுக தலைவர் முக ஸ்டாலின் மரியாதை

சென்னை :

முன்னாள் தமிழக முதல்வர் அண்ணாதுரையின் 110வது பிறந்தநாளை முன்னிட்டு மெரினாவில் உள்ள அவரது சமாதியில் திமுக தலைவர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த அண்ணாதுரையின் 110வது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் திமுக வினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அவரது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச் செயலாளர் அன்பழகன் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் காலை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அவரது சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள மெரினா  நினைவிடத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின்மலர் தூவி மரியாதை செலுத்தினார்.