தேவர் 110வது குருபூஜை: முதல்வர், துணைமுதல்வர் மரியாதை!

பசும்பொன்,

சும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 110 வது குருபூஜையையொட்டி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணைமுதல்வர் ஓபிஎஸ் உள்பட அமைச்சர்கள் மரியாதை செலுத்தினார்.

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கங்கத் தேவரின் 110வது  குருபூஜை  மற்றும் முத்துராமலிங்க தேவரின் 55-வது ஜெயந்தி விழா கடந்த மூன்று நாட்களாக வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையொட்டி அங்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று காலை பசும்பொன்வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தேவர் நினைவிடத்தில் உள்ள அவரது சிலைக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தப்பட்டது. இதையடுத்து ஒவ்வொருவராக மலர் தூவி தேவர் சிலையை வணங்கினர். தொடர்ந்து அவர்கள் முத்துராமலிங்கத் தேவர் வாழ்ந்த வீட்டைப் பார்வையிட்டனர்

இதில் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, காமராஜ், திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.வி.உதயகுமார், விஜயபாஸ்கர் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

‘குரு பூஜை விழாவையொட்டி பல்லாயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.