சென்னை: ‘பேரறிஞர் அண்ணா அவர்களின் 112வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, கழக தலைவர்   ஸ்டாலின் அவர்கள், சென்னை – அண்ணா அறிவாலயத்தில், கழக இருவண்ணக் கொடியை ஏற்றி வைத்து – அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்’

முன்னதாக, சென்னை – வள்ளுவர் கோட்ட முகப்பில் உள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர், அண்ணா அறிவாலயத்தில் கட்சிக் கொடியை ஏற்றிவைத்தும், பேரறிஞர் அண்ணா மற்றும் கரணாநிதியின் திருவுருப் படங்கள் மற்றும் திருவுருவச் சிலைகளுக்கு மலர்தூவியும் மரியாதை செலுத்தினார்.

அண்ணா அவர்களின் பிறந்தநாளையொட்டி, ஸ்டாலின், முகநூல் வழியாக வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது,

வீழ்ந்து கிடந்த தமிழினத்தை தனது பேச்சால், எழுத்தால், செயலால் எழுச்சி பெற வைத்த பேரறிஞர் பெருந்தகை அண்ணா பிறந்தநாள் இன்று! அவர் ஊட்டிய இன எழுச்சி, மொழி உணர்ச்சி, மாநில சுயாட்சி ஆகிய மூன்று கொள்கைத் தீபங்களை எந்நாளும் காப்போம்! அவர் வழியில் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை எந்நாளும் கடைப்பிடிப்போம்! அண்ணா வாழ்கிறார், வாழ்விப்பார் .

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.