ஐதராபாத் பிரபல மாலின் ஒரே அறையில் 114 போலி நிறுவனங்கள்….

ஐதராபாத்:

தராபாத் நகரில் உள்ள பிரபலமான மால் ஒன்றின் மாடியில் உள்ள அறை ஒன்றில் 114 போலி  கம்பெனிகள் செயல்பட்டு வந்தது சோதனையின்போது தெரிய வந்ததுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஐதராபாத்  ஜூபிலி ஹில்ஸ் பகுதியில் ஃபார்ச்சூன் மொனார்க் என்ற பிரபலமான மால் உள்ளது. இந்த மாலின் 3வது மாடியில்உள்ள ஒரு அறையில்  114 போலி நிறுவனங்கள் இயங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் 50 கம்பெனிகள் எந்தத் தொழில் நடவடிக்கைகளிலும் ஈடுபடாமல் கணக்கு காண்பிக்க உபயோகிக்கப்பட்டு வந்ததும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

ஐதராபாத் பார்ச்சூன் மொனார்க் மாலில்  இயங்கி வந்த போலி நிறுவனம்

இதுகுறித்து வருமான வரித்துறைக்கு எழுந்த சந்தேகத்தை தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் குழு ஒன்று சமீபத்தில், இந்த நிறுவனங்கள் அமைந்துள்ள அறையை ஆய்வு செய்தபோது, 117 நிறுவனங்களும் ஒரே அறையில் செயல்பட்டு வந்தது தெரியவந்துள்ளது.

இந்த நிறுவனங்களில் 50க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் எந்தவித நடவடிக்கைகளிலும் ஈடபடமாலும், பல நிறுவனங்கள் சார்பில்  ரூ.15 கோடி வரை நஷ்டக்கணக்கு காண்பித்துள்ளதும் தெரிய வந்துள்ளது.

இந்த நிறுவனங்கள் ஒன்றுக்கொன்று கடன் கொடுக்கும் பேரில் தங்களுக்குள் பணத்தை மாற்றிக்கொள்ளவும் சுழற்சியில் வைத்திருக்கவும் பயன்படுத்தப்பட்டு வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதுபோல இந்த நிறுவனத்தின் இயக்குனர்கள்  அனைவரும் ஒருவருக்கொரு வர் தொடர்புடையவர்கள்  என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் ஒருநபர் 20க்கும் மேற்பட்ட  நிறுவனங்களுக்கு  இயக்குநராக இருப்பது சட்டப்படி குற்றமாகும்.