இன்று 144 பேர் டிஸ்சார்ஜ்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,755 ஆக உயர்வு

சென்னை:
மிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் குணமானோர் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. இன்று ஒரே நாளில் 144 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளது தமிழக மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இன்று புதியதாக  72 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ள நிலையில்,  பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,755 ஆக உயர்ந்துள்ளது. 
இன்று 2 பேர்  உயிரிழந்துள்ள நிலையில், பலியானோர் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று மட்டும் 52 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதனால், சென்னையில் மட்டும் இதுவரை   452 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
அதேவேளையில், கொரோனா தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இன்று ஒரே நாளில் மட்டும் தமிழகம் முழுவதும் இருந்து 144 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். இதன் காரணமாக இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட்டோர் எண்ணிக்கை  866 ஆக உயர்ந்துள்ளது.
தற்போதைய நிலையில், கொரோனா உறுதி செய்யப்பட்ட கேஸ்கள் 844 ஆக உள்ள நிலையில், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டோர் எண்ணிக்கை 866 ஆக உயர்ந்துள்ளது. 

இது கொரோனா பாதிப்பை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.