சென்னை,

முதலமைச்சர் மருத்துவக் காப்பீட்டில் 117 மருத்துவமனைகள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது என்றும், அந்த மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றும் சட்டப்பேரவையில் அமைச்சர் கூறினார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று சுகாதாரத்துறை தொடர்பான விவாதங்கள் நடைபெற்றன. அப்போது உறுப்பினர்களின் கேள்வியை தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது,

தமிழகத்தில் செயல்படுத்தி வரும் முதலமைச்சர் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு செய்துள்ளது தெரிய வந்துள்ளது என்றும், இதில் 16 மருத்துவ மனைகளிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

மேலும் முறைகேடுகளில் ஈடுபட்ட  117 மருத்துவமனைகளுக்கு தமிழக அரசு  எச்சரிக்கை விடுத்துள்ளது என்றும் கூறினார்.