கோவையில் இதுவரை இல்லாத கொரோனா: ஒரே நாளில் 117 பேருக்கு பாதிப்பு, ஒருவர் பலி

கோவை: கோவை மாவட்டத்தில் முன் எப்போதும் இல்லாத அளவு இன்று ஒரே நாளில், 117 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி இருக்கிறது.

கோவை மாவட்டத்தில், கொரோனா தாக்கம் சில வாரங்களாக அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 117 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் கோவை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1261 ஆக உயர்ந்துள்ளது. கோவையில் இன்று கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த ஒருவர் பலியாகி உள்ளார்.

கொரோனா பரவல் அதிகரித்து வருவது போல், உயிரிழப்புகளும் அதிகரிப்பது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, மக்கள் ஊரடங்கு விதிகளையும், சமூக இடைவெளியையும் தவறாது பின்பற்ற வேண்டும் என்று சுகாதாரத்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.