இன்று 1177 பேர்: சென்னையில் கொரோனா பாதிப்பு 1,21,450-ஆக உயர்வு…

மிழகத்தில் இன்று 5968 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,61,435  ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில், இன்று ஒரே நாளில் 1177 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி யுள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிகிறது. கடந்த ஒரு மாதமாக சராசரி ஆயிரம், ஆயிரத்து நூறு என பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் இன்று ஒரே நாளில் 1,177 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,21,450-ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று மட்டுமே 1132 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை  1,06,626 ஆக உயர்ந்துள்ளது.

தற்போதைய நிலையில், 12,287 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று ஒரே நாளில் சென்னையில் மட்டும் 22 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதுவரை 2,537 பேர் சென்னையில் மட்டும் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

You may have missed