சென்னை: 10ம் வகுப்பு துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 11ம் வகுப்பில் சேர்க்கை வழங்க வேண்டும் என்று தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

2019-20 கல்வியாண்டில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், கொரோனா காலத்தில் தேர்வை எழுத முடியாதவர்களுக்கு அண்மையில் துணைத்தேர்வு நடத்தப்பட்டது. தொடர்ந்து 10, 12ம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் அக்டோபர் 28ம் தேதி வெளியானது.

ஆனால், 10ம் வகுப்பு துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 11ம் வகுப்பு சேர்க்கை மறுக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, துணைத் தேர்வில் பாஸானவர்களுக்கு 11ம் வகுப்பு சேர்க்கையை மறுக்காமல் பள்ளிகள் வழங்க வேண்டும் என்று தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.