பெருநகர சென்னை மாநகராட்சியில் இன்று (12/05/2020) கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டலவாரி பட்டியல்

--

சென்னை:

பெருநகர சென்னை மாநகராட்சியில் இன்று (12/05/2020) கொரோனா நோய் உறுதி செய்யப்பட்ட வர்களின் மண்டலவாரி பட்டியலை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது.

அதன்படி, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்வர்களின் மொத்த எண்ணிக்கை 4371 என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தற்போது பாதிப்பில் உள்ளவர்கள் 3581  பேர் என்றும்,  இவர்களில் நேற்று  நோய் உறுதி செய்யப் பட்டவர்கள் 538 பேர் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுவரை பலியானோர் எண்ணிக்கை 32 ஆக உயர்நதுள்ள நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கையும் 743 ஆகவும் உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், சென்னையில் உள்ள 15 மண்டலங்களில்  மீண்டும் ராயபுரம் கோடம்பாக்கம் முன்னிலை வகிக்கிறது.

சென்னையில் அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் 713 பேருக்கும், ராயபுரத்தில் பேருக்கும் 742 கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திரு.வி.க நகர், தேனாம்பேட்டை, வளசரவாக்கம் போன்ற பகுதிகளிலும் கொரோனா தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.

மொத்தம் இதுவரை சென்னையில் 4371 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டலவாரி பட்டியல்

You may have missed