ஜெனிவா:  உலக நாடுகளில் கொரோனா மொத்த பாதிப்பு 2.86 கோடியாக உயர்ந்துள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பாதிப்பு உலக மக்களை அச்சுறுத்தி வருகிறது.

இன்று (12ந்தேதி) காலை 7மணி நிலவரப்படி,  உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளோர் மொத்த எண்ணிக்கை 2,86,48,482 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பும்,  9,13,284 ஆக உயர்ந்து உள்ளது.

தொற்று பாதிப்பில் இருந்து உலகம் முழுவதும் குணமடைந்துள்ளோர் மொத்த எண்ணிக்கை 2,05,74,256  ஆகவும் அதிகரித்துள்ளது.

தொற்று பாதிப்பு காரணமாக, உலக நாடுகளில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தோர் எண்ணிக்கை  9,19,575 ஆக அதிகரித்து உள்ளது.

கொரோனா பாதிக்கப்பட்டுள்ள உலக நாடுகளில், தொடர்ந்து  அமெரிக்கா முதலிடத்தில் இருந்து வருகிறது.  தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,636,247  ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பு காரணமாக இதுவரை உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 197,421 ஆக உள்ளது.  இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,917,962 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போதைய நிலையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2,520,864  ஆக உயர்ந்துள்ளது.

2வது இடத்தில் இந்தியா தொடர்கிறது. அங்கு இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4,657,379  உள்ளது.  தற்போது வரை 77,506  பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை  3,621,438 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 958,435 ஆக உள்ளது.

3வது இடத்தில் தொடர்ந்து பிரேசில் நாடு இருந்து வருகிறது. அங்கு  கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4,283,978 ஆகவும்,  இதுவரை கொரோனா பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 130,474  ஆகவும் உயர்ந்துள்ளது.  தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை 3,530,655 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போதைய நிலையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 622,849 ஆக உள்ளது.