டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 46.57 லட்சத்தை கடந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா  உயிரிழப்பும் 77 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உச்சம் பெற்று வருகிறது.   கடந்த ஒரு மாதமாக தொற்று பாதிப்பு தினசரி 90ஆயிரத்தை கடந்து வருகிறது. விரைவில் நாள் ஒன்றுக்கு பாதிப்பு ஒரு லட்சத்தை அடையும் நிலை உருவாகி உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் உச்சபட்சமாக 97,654 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 46,57,379 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று ஒரே நாளில், 81,455 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதனால், நாடு முழுவதும் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 36,21,438  ஆக அதிகரித்துள்ளது.

நேற்று மட்டும் 1202 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை  77,506  ஆக உயர்ந்துள்ளது.

தற்போதைய நிலையில் 9,57,787  பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாநில அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. தொடர்ந்து 2வது இடத்தில் ஆந்திராவும், 3வது இடத்தில் தமிழகம் தொடர்ந்து வருகிறது.