12/09/2020: சென்னையில் கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: தமிழகத்தில்  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர்  4 லட்சத்து 91 ஆயிரத்து 571 ஆக உயர்ந்துள்ளது. அதிக பட்சமாக சென்னையில்,  சென்னையில் 987 பேருக்கு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,46,626 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று ஒரே நாளில் சென்னையில் 21 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 2,942 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 1,32,772 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தற்போதைய நிலையில், 10,879 பேர் தொற்று பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று ஒரேநாளில் 12,626 பேருக்கு தொற்று சோதனை செய்யப்பட்டு உள்ளது.

சென்னையில் கொரோனா பாதித்த ஒட்டுமொத்த எண்ணிக்கையில் 7% அதாவது 10,879 பேர் மட்டுமே தற்போது சிகிச்சையில் உள்ளனர்.  91% குணமடைந்துவிட்டனர்.

சனிக்கிழமை காலை நிலவரப்படி 1,32,772 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். 10,879 பேர் சிகிச்சையில் உள்ளனர். 2942 பேர் பலியாகிவிட்டனர்.

சென்னையில் கோடம்பாக்கம் மற்றும் அண்ணாநகரில் மட்டுமே ஆயிரத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

வளசரவாக்கத்தில் 900 பேரும்,  அம்பத்தூர், தேனாம்பேட்டை, அடையாறு பகுதிகளில் 800க்கும் மேற்பட்டவர்களும் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதுவரை அண்ணாநகர் மற்றும் கோடம்பாக்கத்தில் தலா 15 ஆயிரம் பேரும், ராயபுரத்தில் 13 ஆயிரம் பேரும் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். தேனாம்பேட்டையில் 12 ஆயிரம் பேரும், தண்டையார்பேட்டையில் 11 ஆயிரம் பேரும் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.

இதுவரை சென்னையில் 1,46,593 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 1,32,772 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.