12/10/2020:  தமிழகத்தில் இதுவரை 6லட்சம் பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் மண்டலவாரியாக கொரோனா பாதிப்பு விவரம்

சென்னை:  தமிழகத்தில் இதுவரை 6லட்சம் பர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்  என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை 1,64,848 பேர் குணமடைந்து உள்ளனர்.

தமிழகத்தில் கொரானா பாதிப்பு கட்டுக்குள்  இருப்பதாக முதல்வர் சொன்னாலும் தினசரி பாதிப்பு 5ஆயிரத்தை தாண்டிய உள்ளது. நாட்டு முழுவதும் கொரோனா பாதிப்பில் தமிழகம் 4-வது இடத்தில் இருக்கிறது. ஆனால் கொரோனா மரணங்கள் எண்ணிக்கையில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கையில் தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது.

சென்னையில்  நேற்று புதிய  1,250 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவையில் 389 பேருக்கும் சேலத்தில் 294 பேருக்கும் புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தமிழகத்தில் நேற்று 5,015 பேருக்கு கொரோனா உறுதியானது. இதில் சென்னையில் 1250 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

சென்னையில் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோர் மொத்த எண்ணிக்கை 1,82,014 ஆக உயர்ந்துள்ளது, தற்போதைய நிலையில் 13,751 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 4,415 பேர் பலியான நிலையில், 1,64,848 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 3 ஆயிரத்து 53 ஆண்கள், 1,962 பெண்கள் என மொத்தம் 5 ஆயிரத்து 15 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று அனைத்து மாவட்டங்களிலும் புதிய தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 1,250 பேரும், கோவையில் 389 பேரும், சேலத்தில் 294 பேரும், குறைந்தபட்சமாக தென்காசியில் 19 பேரும், பெரம்பலூரில் 12 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் இதுவரை 6 லட்சத்து 56 ஆயிரத்து 385 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அந்த வகையில் இந்த பட்டியலில் 3 லட்சத்து 96 ஆயிரத்து 505 ஆண்களும், 2 லட்சத்து 59 ஆயிரத்து 849 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 31 பேரும் அடங்குவர். அதில் 12 வயதுக்கு உட்பட்ட 24 ஆயிரத்து 835 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 84 ஆயிரத்து 318 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 26 பேரும், தனியார் மருத்துவமனையில் 39 பேரும் என 65 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர். இதுவரையில் தமிழகத்தில் 10 ஆயிரத்து 252 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் 3,415 பேர் இறந்துள்ளனர்.

நேற்று 5 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ்

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 5 ஆயிரத்து 5 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 1,070 பேரும், கோவையில் 390 பேரும், செங்கல்பட்டில் 364 பேரும் அடங்குவர். இதுவரையில் 6 லட்சத்து 2 ஆயிரத்து 38 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 44 ஆயிரத்து 95 பேர் உள்ளனர். தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 1 லட்சத்து 82,014 பேரும், செங்கல்பட்டில் 39,347 பேரும், கோவையில் 37,117 பேரும், திருவள்ளூரில் 34,741 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தின் 35 மாவட்டங்களில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை சராசரியாக 4 ஆயிரத்தை தாண்டியது.

தமிழகத்தில் 191 அரசு மற்றும் தனியார் ஆய்வகங்களில் இதுவரை 83 லட்சத்து 22 ஆயிரத்து 832 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நேற்று மட்டும் 90,107 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை 80 லட்சத்து 84 ஆயிரத்து 587 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் நேற்று 88 ஆயிரத்து 439 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.