ரியாத்

ஒட்டகங்கள் அழகுப்போட்டியில் 12 ஒட்டகங்கள் தகுதி இழப்பு செய்யப்பட்டுள்ளன

மிருகங்களில் ஒட்டகங்கள் மிகவும் அசிங்கமான தோற்றம் உடையதாக பெரும்பாலான நாடுகளில் கருதப் பட்டு வருகின்றன.    ஒட்டகங்களின் முதுகு, மற்றும் நீண்ட கால்கல் போன்றவை அவைகளின் தோற்றத்தை மேலும் கெடுப்பதாகவும் பலர் கூறுவது வழக்கம்.   தமிழில் உள்ள எழுத்தான ஒ என்பதே ஒட்டகத்தின் முதுகைக் கொண்டு உருவானதாக தமிழ் நாட்டில் ஒரு நகைச்சுவை தகவல் உலவி வருகிறது.

ஆனால் சௌதி அரேபியாவில் வருடா வருடம் ஒட்டகங்களுக்கு அழகுப் போட்டி நடைபெறுகிறது.   இது நகைச்சுவை அல்ல, உண்மை ஆகும்.    இந்த அழகுப் போட்டியில் ஒட்டகங்களின் காதுகள், உதடுகள்,  உடலின் சில பாகங்கள் ஆகியவைகளைக் கொண்டு அழகான ஒட்டகத்தினை தேர்ந்தெடுக்கின்றனர்.    ஆனால் உதடுகளை அழகுப் படுத்த மருந்துகள்,  மற்றும் உடல் பாகங்களை கவர்ச்சியாக்க முடிகளை அகற்றுதல் ஆகியவைகள் செய்யக் கூடாது என சட்டங்கள் உண்டு

அதன்படி அனைத்து ஒட்டகங்களும்  பரிசீலிக்கப்பட்டன.   அதில் 12 ஒட்டகங்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளன.  இந்த ஒட்டகங்களுக்கு செயற்கை முறையில் உதடுகள், மூக்கு, மேல் மற்றும் கீழ் உதடுகள்,  மற்றும் சில உடல் பாகங்கள் ஆகியவை உயர்த்திக் காட்டப்பட்டுள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.   அதனால் இந்த ஒட்டகங்கள் போட்டியில் இருந்து விலக்கப்பட்டுள்ளன.