டிக்டாக் செயலிக்கு அடிமையான 12 கோடி இந்தியர்கள்! பைட் டான்ஸ் நிறுவனம் தகவல்

ந்தியாவில் டிக்டாக் செயலியை 12 கோடி பேர் பயன்படுத்துவதாக  டிக்டாக் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.  டிக்டாக் எனப்படும் மியூசிக்கல் செயலி. தொடக்கத்தில் புதிதாக பாடல்கள் பாட விரும்புபவர்களுக்கு வரப்பிரசாதமாக இருந்தது. ஆனால், நாளடைவில், பாட்டு என்ற பெயரில் அங்க அசைவுகளை பதிவேற்றி, அதை துஷ்பிரயோகத்துக்கு பயன்படுத்தப் பட்டதால், கடுமையான எதிர்ப்பு எழுந்தது.

இதையடுத்து டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டு பின்னர், எச்சரிக்கையின் பேரில் தடை விலக்கப்பட்டது.  இந்த நிலையில், சுமார் 12 கோடி இந்தியர்கள் டிக்டாக் செயலிக்கு அடிமையாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சீனாவைசேர்ந்த பைட் டான்ஸ் தகவல் தொழில் நுட்ப நிறுவனம் டிக்டாக் செயலி மூலம் கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகிறது.  இதில் கிடைக்கும் லைக்கை எதிர்பார்த்து, ஏராளமான இளைஞர்கள் மட்டுமின்றி அனைத்து வயதினரும் அடிமையாகி வருகின்றனர்.

இந்தியாவில் கிளைகளை கொண்டுள்ள பைட் டான்ஸ் நிறுவனம் மும்பை மற்றும் டெல்லியில் அலுவலகங்களை நிறுவி உள்ளது. 11  இந்திய மொழிகள் உள்பட சர்வதேச அளவில் 150 மொழிகளிலும் இந்த நிறுவனம் டிக்டாக் செயலிகளை செயல்படுத்தி வருகிறது.

டிக்டாக் செயலி நிறுவனம் பிரச்சினைகளிள் சிக்கியதை தொடர்ந்து, தற்போது  ஆபாசம் மற்றும் வன்முறையை தூண்டும் வகையில் பதிவிடப்பட்ட 60 லட்சம் வீடியோக்கள் அழிக்கப்பட்டு இருப்பதாக அதன் செய்தி தொடர்பான பெல்லே பல்டொஷா(belle baldoza) தெரிவித்துள்ளார்.

மேலும், டிக்டாக்கில் 12 கோடி பேர் தங்களது வீடியோக்களை பதிவு செய்துள்ளதாகவும், ஹெலோ செயலியில் 4 கோடி பேரும், விகோ செயலியில் 2 கோடி பேரும் தங்களது திறமைகளைக் காட்டி வீடியோக்களை பதிவிட்டுள்ளதாகவும் கூறி உள்ளார்.

மேலும் தற்போது  டிக்டாக் செயலி  13 விதிகளுடன் செயல்பாட்டை மேப்படுத்தி உள்ளதாக தெரிவித்தவர்,  13 வயதுக்குட்பட்டோர் டிக்டாக் செயலியை பயன்படுத்தாமல் இருக்கவும், ஒருவர் அதிகபட்சம் எத்தனை நிமிடங்கள் அதனை பயன்படுத்தப்பட்டு  இருப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.

மேலும்,   டிக்டாக் செயலியில் உள்ள வீடியோக்கள் அனைத்தும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு ஆபாச வன்முறை வீடியோக்கள் உடனடியாக நீக்கப்படுவதாகவும்,  இதற்கான 13 விதிகள் அடங்கிய உத்தரவாதத்தை கொடுத்த பின்னரே இந்தியாவில் டிக்டாக்கிற்கு விதிக்கப்பட்ட தடை விலக்கிக் கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் மட்டும் தான் டிக்டாக் செயலியை முன்வைத்து தற்கொலை, சாதி பிரச்சனை , ஆபாச பேச்சு, கலாச்சார சீரழிவு போன்ற சர்ச்சைகள் எழுவதால் அது தொடர்பாக புகார் அளிக்க தனி தொலைபேசி எண்ணையும், கண்காணிப்பு அதிகாரி ஒருவரையும் பணி அமர்த்தி உள்ளதாகவும் பைட் டான்ஸ் நிறுவனம் தெரிவித்துஉள்ளது.

மேலும், ,  தற்கொலை செய்யும் எண்ணத்தில் இனி யாராவது வீடியோ பதிவிட்டால் அவர்களது செல்போனிற்கு தொடர்பு கொண்டு கவுன்சிலிங் அளிக்கும் புதிய தொழில் நுட்பம்  செயல்பாட்டிற்கு வர உள்ளதாகவும் பைன் டான்ஸ் நிறுவன பெல்லெ பல்டொஷா  தெரிவித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: 12 crore Indians, Bytedance, Bytedance Ltd information, Tiktok app
-=-