மைசூர் கோவில் பிரசாதம்: பலி எண்ணிக்கை 12ஆக உயர்வு! 82 பேருக்கு தீவிர சிகிச்சை

மைசூர்:

ரு தரப்பினருக்கு  இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கோவில் பிரசாதத்தில் விஷம் கலக்கப்பட்டதில், அதை சாப்பிட்டவர்கள் பலர் உயரிழந்து வருகின்றனர்.

இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 82 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.  இதுதொடர்பாக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில், மைசூர் மாவட்டம் சாம்ராஜ் நகர் பகுதியில் உள்ள பிரபலமான கோயிலில் நேற்று வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

பிரசாதத்தை வாங்கி சாப்பிட்டட பக்தர்கள் சில நிமிடங்களிலேயே வாந்தி ஏற்பட்டு  மயங்கி விழுந்து உயரிழந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மற்றவர்கள் மற்றும்கோவில் நிர்வாகம் பக்தர்களை உடடினயாக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதில் பலர் சம்பவ இடத்திலேயே உயரிழந்த நிலையில், பலர் மருத்துவமனையில் உயரிழந்து வருகின்றனர்.  இதுவரை ஒரு குழந்தை உள்பட  12 பேர் பலியாகி உள்ளனர்.  மேலும், 80க்கும் மேற்பட்டோர் மயங்கிய நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

அதேவேளையில் கோவில் பிரசாதத்தை  சாப்பிட்ட  60க்கும் மேற்பட்ட காக்கைகளும் பரிதாபமாக உயிரிழந்தன.

இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், விவகாரம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.