கூகிள் நிறுவனப் பணியை துறந்த 12 பொறியாளர்கள்

வுண்டன் வியூ, கலிபோர்னியா

தொழில்நுட்ப உலகில் கனவுப் பணியாக கருதப்படும் கூகிள் நிறுவனத்திலிருந்து வெளியேறியிருக்கிறார்கள் பனிரெண்டு பொறியாளர்கள்.

கூகிள் நிறுவனம் அமரிக்க ராணுவத்துடன் இணைந்து செய்யும் ஆய்வுகளை எதிர்த்து இந்த முடிவை எடுத்ததாக கூறியிருக்கிறார்கள். ராணுவ சேவைக்கு கூகிள் நிறுவனம் செயல்படுவது நிறுவனத்தின் மாண்புகளுக்கு எதிரானது என்று குரல் எழுப்பி பிரிந்திருகிரர்கள் இவர்கள்.

ப்ராஜெக்ட் மேவன் என்கிற ஆய்வுத்திட்டம்தான் இத்துணை அமளிகளுக்கும் காரணம். அமரிக்க ராணுவம் பறக்க விட்டிருக்கும் பல்வேறு ஆளில்லா உளவு விமானங்கள் எடுக்கும் காணோளிகளை, செயற்கை நுண்ணறிவு, மற்றும் கற்றல் இயந்திரங்கள் மூலம் பகுப்பாய்வு செய்து அக்காணொளிகளில் இருக்கும் வாகனங்களை, இடங்களை பிரித்தறியும் திட்டம்தான் ப்ராஜெக்ட் மேவன்.

இந்த ஆய்வு எதிர்காலத்தில் ஆளில்லா உளவு விமானங்கள் குண்டு வீசுவதற்கு பயன்படும் என்பதால் கவலை தெரிவித்திருக்கிறார்கள்.

கடந்த ஏபரல் மாதமே இதனை விளக்கி சுமார் மூவாயிரத்து நூறுக்கும் அதிகமான கூகிள் பணியாளார்களிடம் கையொப்பம் பெற்று ஒரு திறந்த மடலை எழுதியிருகிரார்கள். மேவன் திட்டத்தில் இருந்து கூகிள் விலகவேண்டும், ஆயுதபயன்பாட்டில் ஒருபோதும் கூகிள் பங்கேற்க கூடாது என்பதுதான் இந்த மடல் பேசும் செய்தி. இந்த மடல் கூகிள் நிறுவன முதன்மைச் செயல் அதிகாரியான சுந்தர் பிசைக்கும், அல்பாபெட்(கூகிளின் தாய் நிறுவனம்) மு.செ.அ லாரி பேஜ்ஜுக்கும், கூகிள் மேகக் கணினிய மு.செ.அ தயான் கிரீனுக்கும் அனுப்பப்பட்டிருகிறது.

மேவன் திட்டம் கூகிளின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் என்று விவரிக்கிறது கடிதம். இதை வலியுறுத்தும் விதத்தில் கூகிள் தன் தொழில் நுட்பத்தை ஆயுதமயமாக்கவிடமாட்டோம் என்று பனிரெண்டு கூகிள் பொறியாளர்கள் தங்கள் பணிகளைத் துறந்திருக்கிறார்கள்