தண்ணீரில் மூழ்கி இறந்த பெண்கள்

ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலத்தில் தோட்ட வேலைக்கு  சென்ற பெண்  தொழிலாளர்கள் ஏறிச் சென்ற டிராக்டர்  கால்வாயில் விழுந்த விபத்தில் 12 பேர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

தெலுங்கானா மாநிலத்தில் நல்கொண்டா மாவட்டத்தில் பத்மாதி தண்டா கிராமத்தைச் சேர்ந்த 30 பெண்கள் டிராக்டர் மூலம், மற்றொரு பகுதியில் உள்ள ட்டத்துக்கு கூலி வேலைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.

அப்போது, வாடிப்பட்லா (waddipatla)  என்ற கிராமத்தை டிராக்டர் கடந்தபோது, அங்கிருந்த வளைவில் திரும்ப முயன்போது, கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் அருகிலிருந்த  கால்வாயில் பாய்ந்தது.

மீட்பு பணியில் தீயணைப்பு துறையினர்

இதன் காரணமாக தண்ணீரில் மூழ்கிய பெண்கள் அதிலிருந்து வெளியேற முடியாமல் தத்தளித்தனர். அவர்களின் கூக்குரல் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், அவர்களை உடடினயாக மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

மேலும் இதுகுறித்து போலீசாருக்கும், தீ அணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அவர்களும் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

அதற்குள் தண்ணீரில் மூழ்கி 12 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மற்றவர்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது இந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.