ஆப்கானிஸ்தானில் ஒரே நேரத்தில் 12 குழந்தைகள் உயிரிழப்பு – காரணம் தெரியாமல் குழம்பும் மருத்துவர்கள்

ஆப்கானிஸ்தான் 12 குழந்தைகள் ஒரே நேரத்தில் அறியப்படாத நோய் தொற்றினால் உயிரிழந்தது சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகள் இறந்ததற்கான காரணம் குறித்து இன்னும் தெரியவில்லை என மருத்துவமனை சார்பில் கூறப்பட்டுள்ளது.

12infants

ஆப்கானிஸ்தான் நாட்டின் பன்ஷிர் மாகாணத்தில் உள்ள மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் புதிதாக பிறந்த 12 குழந்தைகள் ஒரே நேரத்தில் உயிரிழந்துள்ளன. குழந்தைகள் இதற்கான காரணம் தெரியாமல் மருத்துவர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இதுதொடர்பாக அந்நாட்டில் வெளியிடப்பட்ட செய்தியில், ”இறந்த 12 குழந்தைகளுக்கும் ஒரே மாதிரியான நோய் தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பதாகவும், அந்த நோய் குறித்து ஆய்வு மேற்கொள்ள தலைநகர் காபுலில் உள்ள ஆராய்ச்சிக்கூடத்துக்கு ஆய்வு மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் “ குறிப்பிடப்பட்டுள்ளது.

பிறந்த குழந்தைகளின் மரணத்திற்கு வேறு ஏதேனும் காரணங்கள் இருக்குமா? என்ற கோணத்திலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.