எழும்பூர் ரயில் நிலையத்தில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவர் கைது

எழும்பூர் ரயில் நிலையம் அருகே 12 கிலோ எடை கொண்ட கஞ்சா பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது. கடந்த சில நாட்களாகவே, ரயில் நிலைய வளாகத்தை கண்காணித்து வந்த காவல்துறையினர், இன்று 12 கிலோ எடை கொண்ட கஞ்சாவை பால்பாண்டி மற்றும் சேர்காளை ஆகிய இருவரிடமிருந்து பறிமுதல் செய்தனர். மேலும் இருவரையும் கைது செய்துள்ள காவலர்கள், வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கார்ட்டூன் கேலரி