Random image

பிலிப்பைன்ஸ் ‘மங்குட்’ புயல் சீற்றத்துக்கு 12 பேர் பலி

மணிலா:

பிலிப்பைன்ஸ் மங்குட் புயலில் சிக்கி 12 பேர் பலியாகியுள்ளனர்.

பிலிப்பைன்ஸ் நாட்டில் ‘மங்குட்’ என்ற புயல் இன்று கடுமையாக தாக்கியது. இந்த ஆண்டின் மிக சக்தி வாய்ந்த புயலாக கருதப்படுகிறது. இதனால் பிலிப்பைன்ஸ் வடக்கு கடற்கரை பகுதியில் கடும் சூறைகாற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது.

மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் காற்று வீசுவதால் வீடுகள் சேதமடைந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

புயல் ஏற்படுத்திய பாதிப்புகளில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலரை காணவில்லை. புயல் காரணமாக பிலிப்பைன்சில் கடல் மற்றும் விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. பள்ளிகள் மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.