இந்தியாவில் காற்று மாசினால் 12 லட்சம் பேர் மரணம் : ஆய்வுத் தகவல்

டில்லி

கடந்த 2017 ஆம் வருடம் காற்று மாசினால் இந்தியாவில் 12 லட்சம் பேர் மரணம் அடைந்துள்ளனதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

அமெரிக்காவில் புகழ்பெற்ற தன்னாய்வு அமைப்பான ஹெல்த் எஃபெக்ட்ஸ் இன்ஸ்டிடியூட் என்னும் அமைப்பு இயங்கி வருகிறது. மருத்துவ வசதி, உலக சுகாதாரம், மாசுக் கட்டுப்பாடு உள்ளிட்ட பல இனங்களிலும் உலக நாடுகளில் இந்த அமைப்பு ஆய்வு நடத்தி வருகிறது. சமீபத்தில் ஆசிய நாடுகளான சீனா மற்றும் இந்தியா குறித்த ஆய்வு ஒன்றை நடத்தி உள்ளது.

உலக நாடுகளில் அதிகம் காற்று மாசு அடைந்துள்ள நாடுகளாக இந்தியா மற்றும் சீனா உள்ளதால் இந்த ஆய்வு இரு நாடுகளிலும் நடைபெற்றதாக கூறப்பட்டுள்ளது. உலக அளவில் காற்று மாசு அளவு கடந்த 2017 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் சீனாவில் 2.5 மடங்கு அதிகரித்துள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டது.

மேலும் இந்தியா மற்றும் சீன நாடுகளில் தலா சுமார் 12 லட்சம் பேர் மரணம் அடைந்துள்ளதாக இந்த ஆய்வில் அதிர்ச்சியுட்டும் தகவல் வெளி வந்துள்ளது. இந்த காற்று மாசு காரணமாக பக்கவாதம், நீரிழிவு, மாரடைப்பு, நுரையீரல் புற்றுநோய், நாள்பட்ட நுரையிரல் நோய் மற்றும் தொற்று காரணமாக இந்த உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன எனவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

You may have missed