இந்தியாவில் மேலும் 12 புதிய அணு உலைகள்!

மாஸ்கோ: இந்தியாவின் அதிகரித்துவரும் மின்சார தேவையை பூர்த்திசெய்ய வேண்டியும், தங்குதடையற்ற மின்சாரத்தை வழங்கும் வகையிலும், மேலும் 12 அணு உலைகள் அமைக்கப்படவுள்ளதாக அணுசக்தி கமிஷன் தலைவரும், அணுசக்தி துறை செயலாளருமான கே.என்.வியாஸ் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய நாட்டின் சோச்சியில நடைபெற்ற ரஷ்ய சர்வதேச அணு கண்காட்சி நிகழ்ச்சியில் அவர் இதை தெரிவித்தார்.

தற்போதைய நிலையில், மொத்தம் 9 அணுஉலைகள் கட்டப்பட்டு வருகின்றன. இவை, வருகின்ற 2024 – 2025 காலகட்டங்களில் முடிக்கப்படவுள்ளன. இவற்றில், 700 மெகாவாட் திறன்கொண்ட 2 அணுஉலைகள் குஜராத்திலும், அதேதிறன் கொண்ட 2 அணுஉலைகள் ராஜஸ்தானிலும் கட்டப்பட்டு வருகின்றன.

தமிழகத்தின் கூடங்குளத்தில் 1000 மெகாவாட் திறன்கொண்ட ஒரு அணுஉலையும், கல்பாக்கத்தில் 500 மெகாவாட் திறன்கொண்ட 1 அணுஉலையும், ஹரியானாவின் கோரக்பூரில் 700 மெகாவாட் திறன்கொண்ட 2 அணுஉலைகளும் அடக்கம்.

இவைதவிர்த்து, மேலும் 12 புதிய அணுஉலைகளைக் கட்டுவித்து, மின்உற்பத்தியைப் பெருக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த 12 அணுஉலைகளில், 10 அணுஉலைகள் 700 மெகாவாட் திறனிலும், 2 அணுஉலைகள் 1000 மெகாவாட் திறனிலும் அமையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

– மதுரை மாயாண்டி