கேரளாவில் மேலும் 12 பேர் பாதிப்பு: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 236ஆக அதிகரிப்பு

டெல்லி:

ந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை 236 ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 12 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், கொரோனா பாதிக்கப்பட்ட 2 பேர் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

சீனாவை அச்சுறுத்திய கொரோனா வைரஸ் தற்போது இந்தியா உள்பட உலக நாடுகளை மிரட்டி வருகிறது. இந்தியாவில்,  கொரோனா வைரஸ்  பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 236-ஆக உயா்ந்துள்ளது. மேலும் நோய் தொற்று காரணமாக நான்கு இந்தியர்கள், ஒரு இத்தாலியை சேர்ந்தவர் என மொத்தம் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று ஒரே நாளில் மட்டும்  புதிதாக 55 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதிகபட்சமாக கேரளாவில் 12 பேருக்கு நோய் தொற்று தாக்குதல் இருப்பது தெரிய வந்துள்ளது. நோய் தொற்றில் இருந்து இதுவரை 23 பேர் குணமடைந்துள்ளனா்.

அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 52 பேரும், கேரளத்தில் 40 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனா். தமிழகத்தில் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில் கேரளாவில் கொரோனா தொற்று உடைய 2 பேர் தப்பி ஓடியதாகவும், ஆனால், அவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

கேரளாவில் இங்கிலாந்தைச் சேர்ந்த 5 பேர் உள்பட 12 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.  காசர்கோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநிலம் முழுவதும் 44,390 பேர் கண்காணிப்பில் உள்ளதாகக் குறிப்பிட்டார். அவர்களில் 225 பேர் மருத்துவமனையில் மீதமுள்ளவர்கள் அவரவர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்ப்பட்டு வருவதாகக் கூறினார்.

கொரோனாவின் தீவிரத்தை சிலர் உணரவில்லை என்று கூறிய பினராயி விஜயன், அப்படிப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கத் தயாராகி வருவதாகவும் கூறினார்.

பிரதமர் மோடியின் ஊரடங்கு உத்தரவுக்கு ஆதரவளிப்பதாகவுடம் தெரிவித்து உள்ளார்.

கொரோன வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பிரதமா் மோடி அறிவித்துள்ளார். அதன்படி நாளை நாடு முழுவதும் சுய ஊரடங்கை கடைப்பிடிக்க வேண்டும் என பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்.