12 மணி நிலவரம்: அதிமுக தொடர்ந்து முன்னிலை

--

download

 

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை பகல் 12 மணி நிலவரத்தின்படி அதிமுக கூட்டணி 130 தொகுதிகளிலும் திமுக கூட்டணி 95 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கன்றன.

தமிழகத்தில் வாக்குப்பதிவு நடந்து முடிந்த 232 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு துவங்கியது.

பகல் 12 மணி நிலவரப்படி அதிமுக கூட்டணி 130 தொகுதிகளிலும் திமுக கூட்டணி 95 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கன்றன. 3 இடங்களில் அதிமுகவும் இரண்டு இடங்களில் திமுகவும் வெற்றி பெற்றுள்ளன.

ஒரத்தநாட்டில் திமுக வெற்றி:

ஒரத்தநாட்டில் திமுக வேட்பாளர் ராமச்சந்திரன் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அமைச்சர் ஆர். வைத்திலிங்கத்தை 3642 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.

ஆர்.கே.நகரில் தொடர்ந்து முதல்வர் வேட்பாளர் ஜெயலலிதா முன்னிலை வகிக்கிறார். அவர்  27,484 வாக்குகள் பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் சிம்லா முத்துச்சோழன் 16964 வாக்குகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வசந்திதேவி 1,302 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

நாங்குநேரியில் காங்கிரஸ் வேட்பாளர் எச்.வசந்தகுமார் வெற்றி பெற்றார்.

விளாத்திக்குளத்தில் அதிமுக வேட்பாளர் உமா மகேஸ்வரி வெற்றி பெற்றார்.