Random image

ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் கைது: இலங்கை கடற்படை நடவடிக்கை

ராமேஸ்வரம்:

ச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். இது மீனவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராமேஸ்வரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதியை சேர்ந்த  மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களில் 12 பேரையும், பிரான்சிஸ், தேவதாஸ் என்பவருக்கு சொந்தமான 2 படகுகளையும் சிறைபிடித்தனர்.

மற்ற மீனவர்களையும் அங்கிருந்து விரட்டியடித்து உள்ளனர்.  கரை திரும்பிய மீனவர்கள் இதுகுறித்து காவல் துறையில் புகார் கொடுத்துள்ளனர்.

இலங்கை கடற்படையினரின் தொடர் கைது நடவடிக்கை தமிழக மீனவர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.