ராசிகளின் குணங்களை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளும் முறை – மூன்றாம் பகுதி

ராசிகளின் குணங்களை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளும் முறை – மூன்றாம் பகுதி

ராசிகளின் குணாதிசயங்களை எளிதில் ஞாபகத்தில் வைத்துக்கொள்வதற்காக ஜோதிடத்தில் ராசி உருவங்கள் ஒரு வகையான சங்கேத குறியீடுகளாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இன்று மூன்றாம் பகுதியில் அடுத்த  3  ராசிகளைப் பார்ப்போம்

துலாம் 

ராசியின் உருவம் கண்களைக்கட்டிக்கொண்டு ஒரு கையில் தராசு ஏந்தி நிற்கும் பெண் ஆகும்.
தராசு பெரும்பாலும் வியாபார நிறுவனங்களிலேயே காணப்படும்,

இதனால் துலாம் ராசிக்காரர்கள் வியாபார தந்திரம் உடையவர்கள் என்றும்,எதையும் சீர்தூக்கிப்பார்த்து திறம்பட செயல்படக்கூடியவர்கள் என்றும் கூறப்படுகிறது.

எந்த ஒரு சூழ்நிலையிலும் நடுநிலை தவறாதவர்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசியின் உருவம் தேள் ஆகும்.

தேள்கள் எப்பொழுதும் மறைவிடங்களிலேயே வசிக்கும்.

மறைந்திருந்து தாக்கும் குணமுடையவை

இதனால் விருச்சிக ராசிக்காரர்கள் எதிலும் வெளிப்படையாக நடந்துகொள்ளமாட்டார்கள்.

இவர்களைப் புரிந்துகொள்வது சிரமமாகவே இருக்கும்.

இரண்டு தேள்கள் ஒரே இடத்தில் வசிக்காது.

அப்படி வசித்தாலும் அவை ஒன்றோடொன்று சண்டையிட்டு மடிந்து போகும்.

இதனால் விருச்சிக ராசிக்காரர்களிடம் போட்டி,பொறாமை போன்ற குணங்கள் காணப்படும்.

பெண் தேளானது குஞ்சி பொறித்தால் தாய்த்தேள் இறந்துவிடும்,

இதனால் விருச்சிக ராசியினர் சிலருக்காக எந்த தியாகத்தையும் செய்யத் தயாராக இருப்பார்கள் எனக்கூறப்படுகிறது.

தனுசு

தனுசு ராசியின் உருவம் பாதி குதிரையும்,பாதி மனிதனுமாக வில்லேந்திய உருவமாகும்.

இந்த ராசியின் உருவம் பாதி மிருகமாகவும்,பாதி மனிதனாகவும் காட்டப்பட்டுள்ளதால்

இந்த ராசிக்காரர்கள் தங்களுடைய மிருக குணங்களிலிருந்து விடுபட்டு மனிதத் தன்மையை வளர்த்திக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள்.

முடிந்தவரை தங்கள் குறைகளைத் திருத்திக் கொள்வதற்குத் தயாராகவே இருப்பார்கள்.

இந்த ராசி உருவம் வில்லேந்திக் குறி பார்ப்பது போல் உள்ளது,

இதனால் இந்த ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையை ஒரு லட்சியத்துடனேயே நடத்தி செல்வார்கள் எனக்கூறப்படுகிறது.

மன ஒருமைப்பாடு இருந்தால் மட்டுமே வில் வீரன் சரியாகக் குறிபார்க்க முடியும்

இதன் காரணத்தால் தனுசு ராசிக்காரர்கள் இயற்கையாகவே மன ஒருமைப்பாடுடையவர்களாக இருப்பார்கள் எனக்கூறப்படுகிறது

.இவர்களுக்கு உள்ளுணர்வு அதிகமாக இருக்கும்.

தர்மத்தை நிலை நாட்ட ஸ்ரீராமன் வில்லேந்தினான் என்பர்,இதனால் வில் தர்மத்தின் குறியீடாகக் கருதப்படுகிறது.

தனுசு ராசிக்காரர்கள் தர்மத்திற்காகப் போராடுவார்கள்.

நாளை இறுதிப்பகுதியில் கடைசி 3 ராசிகள் குறித்து பார்ப்போம்

கார்ட்டூன் கேலரி