மறைந்த 140 திமுக நிர்வாகிகளுக்கு இரங்கல் உள்பட திமுக பொதுக்குழுவில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றம்… முழு விவரம்

சென்னை: திமுக பொதுக்குழு கூட்டம் இன்று அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் கூடியது. வரலாற்றில் முதன்முதலாக பொதுக்குழு கூட்டம் காணொளி காட்சி மூலம் நடைபெற்றது. கூட்டத்தில் வெளி மாவட்டங்களை சேர்ந்த பொதுக்குழு உறுப்பினகள் காணொளி காட்சி மூலம் கலந்துகொண்டனர்.

இன்றைய பொதுக்குழுவில், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, திமுக பொதுச்செயலாளர் துரை முருகன், மற்றும் துணைப்பொதுச்செயலாளர்களாக பொன்முடி, ஆ.ராசா நியமனம் செய்யப் பட்டு உள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிகாரப்பூர்வமாக  அறிவித்தார்.

தொடர்ந்து,  தீர்மானங்களை திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் வாசித்தார். அதையடுத்து,  12 முக்கிய தீர்மானங்களும் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி,

முதலில், மறைந்த திமுக நிர்வாகிகள் 140 பேருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கொரோனாவின் போது சிறப்பாக செயல்பட்ட திமுக தலைவர், நிர்வாகிகள், தன்னார்வலர் களுக்கு வாழ்த்தும்,  104 முறை காணொலி காட்சி வாயிலாக ஸ்டாலின் பேசி செயல்பட்டதற்கு வாழ்த்தும்  தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டை உறுதி செய்ததற்கு நன்றி 

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கைக்கு எதிர்ப்பு 

புதிய கல்வி கொள்கைக்கு கண்டனம்

அதிமுக ஊழலுக்கு பாதுகாவலராக இருக்கும் மத்திய அரசுக்கு கண்டனம்

கொரோனா விவகாரத்தில் தமிழக அரசுக்கு கண்டனம்

திமுக தலைவர் முதல்வராக 2021ல் ஆட்சி அமைத்திட சூளுரை

உள்பட 12 தீர்மானம் நிறைவேற்றம் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தீர்மானத்தின் முழு விவரம்

This slideshow requires JavaScript.