சென்னை

நேற்று நடந்த சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு ஆங்கில தேர்வில் கேள்வித்தாள் தவறான முறையில் இருந்ததால் மாணவர்கள் நிவாரண மதிப்பெண் அளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு ஆங்கில பாடத்தில் இரு கதைப்புத்தகங்கள் உள்ளன. இவை எச் ஜி வெல்ஸ் எழுதிய ‘தி இன்விசிபிள் மேன்” என்பதாகும். மற்றது ஜார்ஜ் எலியட் எழிதிய “சிலாஸ் மார்னர்” ஆகும் இந்த இரண்டில் ஒரு புத்தகத்தை ஆசிரியர்கள் நடஹ்துவார்கள். தேர்வின் சமயத்தில் இந்த புத்தகத்தில் இருந்து தனித்தனியே கேள்விகள் கேட்கப்பட்டு அதில் இரு புத்தகக்த்தில் ஒன்றில் இருந்து மட்டும் தேர்ந்து பதில் அளிக்க வேண்டும்.

ஒவ்வொரு வருடமும் அது போல இருந்த முறை தற்போது மாற்றம் ஏதும் அறிவிக்கப்படாமல் தேர்வில் இரு புத்தகத்தில் இருந்தும் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளனர். மற்றும் இந்த கேள்விகளில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்யும் வசதியும் கொடுக்கப்படவில்லை. அத்துடன் இந்த இரு பாடத்தில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகளும் அவசியம் பதில் அளிக்க வேண்டியவைகளாக உள்ளன.

அதனால் மாணவர்கள் எதை எழுதுவது எதை எழுதாமல் விடுவது என்பதை அறியாமல் சுமார் 10 நிமிட நேரத்தை வீணடித்துள்ளனர். இது குறித்து ஒரு தேர்வு மையத்தில் அனைத்து மாணவர்களும் புகார் அளித்துள்ளனர். இந்த விவகாரம் உடனடியாக சி பி எஸ் ஈ உயர்மட்டத்துக்கு தகவல் அனுப்பப் பட்டுள்ளது. ஆனால் இது வரை எந்த ஒரு நடவடிக்கையும் இது குறித்து எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இது குறித்து நேற்று தேர்வு எழுதிய மாணவர்கள், “தேர்வில் 11 மற்றும் 12 ஆம் கேள்விகளில் உட்பிரிவுகள் இரண்டு இருக்கும். அதில் ஒன்றை தேர்ந்தெடுத்து விடை அளிக்குமாறு கேட்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு கேள்வியும் ஓவ்வொரு புத்தகத்தில் இருந்து கேட்கப்பட்டிருக்கும். ஆனால் தற்போது 11 ஆம் கேள்வியை ஒரு புத்தகத்தில் இருந்தும் 12 ஆம் கேள்வியை வேறொரு புத்தகத்தில் இருந்தும் கேட்கப்பட்டுள்ளது. இதனால் எங்களுக்கு நிவாரண மதிப்பெண் வழங்கப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.