டில்லியில் விபரீதம்: துப்பாக்கியை வைத்து விளையாடியபோது குண்டுபாய்ந்து சிறுவன் பலி

டில்லி:

லைநகர் டில்லியில் உள்ள கண்டோன்மென்ட் பகுதியில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

12 வயதான சிறுவன், வீட்டிலிருந்த துப்பாக்கியை எடுத்து விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக துப்பாக்கி விசையில் கைப்பட்டு அழுத்தப்பட்டதால், குண்டு பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தான்.

இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.