விஸ்வநாதன் ஆனந்திடம் பாராட்டு பெற்ற 12 வயதுடைய சிறுவன்

சதுரங்க போட்டியில் உலகின் ஐந்து முறை சாம்பியன் ஆன விஸ்வநாதன் ஆனந்த் சென்னையை சேர்ந்த 12 வயதுடைய சிறுவன் இரண்டாவது இளம் கிராண்ட் மாஸ்டர் ஆக வருவான் என்று முன்கூட்டியே வாக்குறுதி அளித்திருந்தார். சரியாக ஒரு வருடத்திற்கு முன்பு மிகவும் திறமையான ஆர். பிரகானந்தா என்ற சிறுவனை விஸ்வநாதன் ஆனந்த் தேர்ந்தெடுத்தார். அவரின் எதிர்காலம் பிரகாசமாக இருப்பதாகவும், அவர் சரியான பாதையை நோக்கி செல்வதாக ஆனந்த் கூறினார். பிரகானந்தாவின் திறமையை பார்த்த மக்கள் எப்படி நீங்கள் அவரை தேர்ந்தெடுத்தீர்கள் என்று கேள்வி கேட்பதாகவும் ஆனந்த் குறிப்பிட்டுள்ளார்.
praganandhaa
ஜூன் 23ம் தேதியை இந்திய சதுரங்க போட்டியின் அமைப்பிற்கு சிறப்பு நாளாக அமைந்தது. சென்னையில் வசித்து வரும் 12வயதான சிறுவன் உலகின் ஐந்து முறை செஸ் சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் மூலம் பாராட்டை பெறுவார் என்று யாரும் எண்ணியது இல்லை. உலகிலேயே இளம் வயதுடைய கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை பிரகானந்தா பெறுவார் என ஆனந்த் கூறினார். பாரிசில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற ஆனந்த் இதனை தெரிவித்த நிலையில் சதுரங்க போட்டியில் குழந்தைகளை ஊக்குவிக்கவும் வலியுறுத்தினார்.

”சதுரங்க போட்டியின் கிளபிற்கு வரவேற்கிறேன். வாழ்த்துக்கள் பிரகானந்தா, விரைவில் சென்னையில் உங்களை சந்திக்கிறேன்” என்று ஆனந்த் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இத்தாலியில் நடைபெற்ற 12வயதுடைய சிறுவர்கள் பங்கேற்கும் சதுரங்க போட்டியின் இறுதி சுற்றில் ரவுண்ட் ப்ரூஜெஸ்ஸரை தோற்கடித்ததன் மூலம் பிரகானந்தா உலகின் 2வது இளம் வயதுடைய கிராண்ட் மாஸ்டர் ஆனார். இதற்கு முன்பு 12வருடம் ஏழு மாதங்கள் கடந்த செர்கி கர்ஜகின் உலகின் முதல் இளம் வயது கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை பெற்றார். பிரகானந்தா 12வருடங்கள் 10 மாதங்கள் 13 நாட்கள் கடந்து இரண்டாது இளம் கிராண்ட் மாஸ்டர் ஆனார். இதேபோல் 13 வயதை கடந்த நோதிர்பெர்க் அப்டஸ்டோரோவ் மூன்றாவது இளம் கிராண்ட் மாஸ்டராக தேர்வு செய்யபப்ட்டார்.

இது குறித்து பிரகானந்தாவின் பயிற்சியாளர் ஆர்.பி.ரமேஷ் கூறுகையில், “ பிரகானந்தாவை நினைத்தால் எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. அவன் இளம் கிராண்ட் மாஸ்டராக தேர்வு செய்யப்பட்டதற்கு மகிழ்ச்சி அளிக்கிறது. கடின உழைப்பும் அதற்கான முயற்சியுமே பிரகானந்தா இந்த சாதனையை நிகழ்த்த முடிந்தது” என்று கூறினார்.

”பிகானந்தா இத்தகை வெற்றியை அடைய அவரது பயிற்சியாளர் மிகவும் உதவியாக இருந்தார். எனது மகள் வைஷாலி செஸ் வீராங்கனை, பிரகானந்தா செஸ் போட்டியில் முன்னேற்றம் அடைய வைஷாலியும் காரணமாக இருந்தாள்” என்று பிரகானந்தாவின் தந்தை மகிழ்ச்சியுடன் கூறினார்.

இத்தாலியில் நடைபெற்ற 12வயதுக்குட்பட்டோருக்கான சதுரங்க போட்டியில் ஆறு போட்டிகளில் வெற்றிபெற்ற பிரகானந்தா 20 புள்ளிகளை பெற்று இளம் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை பெற்றார்.

வாழ்த்துக்கள் பிரகானந்தா.