தாய்க்கு பிரசவம் பார்த்த 12வயது மகள்!

வாஷிங்டன்,

மெரிக்காவில் தாய்க்கு 12 வயது மகளே பிரசவம் பார்த்த செய்தி வைரலாக பரவி வருகிறது.

அமெரிக்காவின் மிஸ்ஸிஸிப்பி பகுதியை சேர்ந்தவர் ஜெஸீ. 12 வயதான இவர் பள்ளி படிப்பு படித்து வருகிறார். இவரின் தாய் கர்ப்பமாக இருந்துள்ளார். இதன் காரணமாக தனது தாய்க்கு தானே பிரசவம் பார்க்க வேண்டும் ஆசைப்பட்ட ஜெஸி இதுகுறித்து, தனது தாய் மருத்துவம் பார்த்து வரும் டாக்டர்களிடம் கூறியுள்ளார்.

சம்பவத்தன்று ஜெஸியின் தாய் பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, டாக்டர்கள் ஜெஸியின் விருப்பத்தை நிறைவேற்ற முடிவு செய்தனர்.

அதையடுத்து, பிரசவ அறைக்கு அழைத்துச்செல்லப்பட்ட ஜெஸி, தனது தாய்க்கு டாக்டர்கள் முன்னிலையில், அவர்களின் ஆலோசனையின் பேரில் பிரசவம் பார்த்தார்.

அப்போது ஜெஸி, அழகான ஆண் குழந்தையை தனது கையாலேயே வெளியே எடுத்துள்ளார். இந்த உணர்ச்சிகரமான நேரத்தின்போது, ஜெஸி தன்னையறியாமலேயே அழுதுவிட்டார்.

இதுகுறித்து பேசிய ஜெஸீ, “இது என் வாழ்நாளில் மிகச்சிறந்த தருணம். தம்பியை முதலில் பார்க்கும் போது நான் அழுதுவிட்டேன்.” என பிரமிப்பு குறையால் கூறியுள்ளார்.

தாய்க்கு  12 வயதுடையே  மகளே பிரசவம் பார்த்த புகைப்படம் சமூக வலைதளக்ளில் வைரலாக பரவி வருகிறது.